கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியிலுள்ள கோயில் களில் வார இறுதி நாட்களில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேற்று பக்தர்கள் கோயில்களில் திரண்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துவருவதை அடுத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் வரிசையாக சென்று நெல்லையப்பர், காந்திமதியம்மனை தரிசித்தனர். கோயிலின் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பணியாளர்கள் பரிசோதித்தனர். இதுபோல் பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் குடும்பத் தினருடன் சென்று வழிபட்டனர். மேலப்பாளையம், பாளையங் கோட்டை, திருநெல்வேலி, பேட்டை பகுதிகளில் உள்ள மசூதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர் பங்கேற்றனர்.

கோயிலின் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பணியாளர்கள் பரிசோதி த்தனர். இதுபோல் பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் குடும்பத் தினருடன் சென்று வழிபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்