சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் :

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் கொண்டாடும் வகையில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு கடந்த 2-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வாகனத்தை திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா முன்னிலை வகித்தார். மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், போக்ஸோ நீதிமன்ற நீதிபதி அன்பு செல்வி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி குமரேசன், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, நீதித்துறை நடுவர்கள் கடற்கரை செல்வம், ஜெகதீஸ், விஜயலட்சுமி, செக் மோசடி வழக்கு நீதிமன்ற நீதிபதி அருண்குமார், வழக்கறிஞர் சங்க பொருளாளர் மாரியப்ப காந்தி, வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், மதியழகன், மாரியம்மாள், மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE