கை கழுவுதல் குறித்து செய்முறை பயிற்சி :

By செய்திப்பிரிவு

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி மக்கள் கூடும் இடங்களில் கை கழுவும் 7 நிலைகள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் பாரா மெடிக்கல் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கை கழுவும் நிலைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த செய்முறை விளக்க நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி இருதயராஜ் தலைமை வகித்து பேசியதாவது:

கை கழுவும் அவசிய த்தை மக்கள் புரிந்து கொள்ளவே இந்த தினம் உருவாக்கப்பட்டது. கை கழுவுதல் என்பது தொற்றுநோயை தடுக்க ஒரு சுலபமான வழி. கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் மட்டுமே போதுமானது. கைகளை அடிக்கடி கழுவுவது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளின் பரி மாற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்