பாபநாசத்தில் 17 மி.மீ. மழை :

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 17 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருந்தது. மாவட்டத்திலுள்ள மற்ற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 12 மி.மீ, அம்பாசமுத்திரம்- 1 மி.மீ, சேரன்மகாதேவி- 2 மி.மீ, ராதாபுரம்- 6 மி.மீ.

நீர்மட்டம் 106.40 அடி

பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 2,887.04 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அணையில் நீர்மட்டம் நேற்று முன்தினம் 103 அடியாக இருந்தது. ஒரே நாளில் 3.40 அடி உயர்ந்து, நேற்று காலையில் நீர்மட்டம் 106.40 அடியாக இருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்):

சேர்வலாறு- 125 அடி (156 அடி), மணிமுத்தாறு- 67 (118), வடக்குபச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.36 (22.96), கொடுமுடியாறு- 32 (52.25)

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 25 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 9 மி.மீ, ஆய்க்குடியில் 6 மி.மீ., கருப்பாநதி அணையில் 3 மி.மீ., செங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 64.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.79 அடியாகவும் இருந்தது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை, 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

கடனாநதி அணை நீர்மட்டம் 64.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.79 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE