தமிழக அரசின் தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால், தி.மலை அண்ணாமலையார் கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டிருந்தனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து மத வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை தமிழக அரசு நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உடல் வெப்பம் பரிசோதிக்கப் பட்டது. கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப் பட்டது. விஜயதசமி மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால், காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மேலும், குழந்தை களுடன் வருகை தந்து இறை வனை பெற்றோர் தரிசனம் செய்தனர்.
மேலும், செய்யாறு வேத புரீஸ்வரர் கோயில், படைவீடு ரேணுகாம்பாள் கோயில், புதூர் மாரியம்மன் கோயில், வில்வாரணி முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று படையெடுத்தனர். புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமை என்ப தால், வைணவ தலங்களில் இன்று பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago