களக்காடு ஒன்றியத்தில் தம்பதி, தந்தை- மகள் வெற்றி :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் கணவன்- மனைவி, தந்தை- மகள் வெற்றி பெற்றுள்ளனர்.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 வார்டுகள் உள்ளன. அதில் 1-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜார்ஜ் கோசலும், 7-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள இந்திராவு ம் கணவன், மனைவி ஆவர். இதுபோல் 4-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள தமிழ் செல்வனும், 9-வதுவார்டில் வெற்றிபெற்றுள்ள சங்கீதாவும் தந்தை, மகள் ஆவர்.

நாங்குநேரி ஒன்றியத்தில் 6-வது வார்டில் அமமுக வேட்பாளர் முத்துலெட்சுமியும், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2-வது வார்டில் அமமுக வேட்பாளர் முத்துப்பாண்டியும் வெற்றிபெற்றுள்ளனர்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள செங்காளக் குறிச்சி ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சவுந்தர்ராஜன் 928 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட தேவகிருபை என்பவர் 927 வாக்குகள் பெற்று ஒரு வாக்கில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் மீண்டும் வாக்குகளை எண்ணுமாறு அதிகாரிகளிடம் தேவகிருபை கோரிக்கை விடுத்தார். பின்னர் தனது சொந்த கிராமத்துக்கு சென்று ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டார். போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்