திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் மொத்த முள்ள 12 வார்டுகளிலும் 11-ல் திமுகவும், 1-ல் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி உட்பட 9 மாவட்டங் களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டு மூலம் நடத்தப் பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் காலையில் 8 மணியளவில் வாக்குச் சீட்டுகளை பிரித்து, எண்ணுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் முடிவுகள் முழுமையாக தெரிய இரவு வெகுநேரம் ஆகியது.
மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிவரை நடைபெற்றது. இதுபோல் பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று அதிகாலை 3 மணிவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று காலையில் அறிவிக்கப்பட்டன. இதில் 11இடங்களை திமுகவும், ஓரிடத்தில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கும், அதன் கூட்டணியான பாஜகவுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம்:
வார்டு 1- செல்வலட்சுமி அமிதாப் (திமுக), 2- மகேஷ்குமார் (திமுக), 3- கனகராஜ் (திமுக), 4- சத்தியவாணிமுத்து (திமுக), 5- அருள் பாண்டியன் (திமுக), 6- சாலமன் டேவிட் (திமுக), 7- கிருஷ்ணவேணி (திமுக), 8- கனிதங்கம் (காங்கிரஸ்), 9- ஜான்ஸ் ரூபா (திமுக), 10- லிங்க சாந்தி (திமுக), 11- பாஸ்கர் (திமுக), 12- விஎஸ்ஆர் ஜெகதீஷ் (திமுக).
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago