இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக் கப்படுவதாகவும், ஒவ்வொரு 67 நிமிடத்துக்கு ஒரு வரதட்சணை உயிரிழப்பு நடப்பதாகவும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரி விக்கப்பட்டது.
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, செந்தமிழ் கலை மற்றும் கீழ்திசைக் கல் லூரி, பெட் கிராட் இணைந்து நடத்திய மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி செந்தமிழ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. முதல்வர் (பொறுப்பு) கி.வேணுகா தலைமை வகித்தார். துணை முதல்வர் கோ.சுப்புலெட்சுமி, நான்காம் தமிழ்ச்சங்க செயலர் ச.மாரியப்ப முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா பேசியதாவது:
சட்ட உதவி தேவைப்படுவோர் யாராக இருந்தாலும் இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம். இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் மொபைல் போனுக்கு அடிமை யாக இருக்கும் சூழல் உள் ளது. இதனால் மொபைல் போன் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் இணைய வழி தொடர்புகளை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.காந்தி பேசியதாவது:
தேசிய குற்றப்புலனாய்வுக் கூடம் 2021-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு 16 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப் படுவதாகவும், ஒவ்வொரு 67 நிமிடத்துக்கு ஒரு வரதட்சணை உயிரிழப்பு சம்பவமும், ஒவ்வொரு 6 நிமிடத்துக்கு ஓரு பெண்ணுக்கு எதிரான குற்றமும் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்க போதிய சட்ட விழிப்புணர்வு அவசியம்.
இந்தியாவில் ஆண்டுக்கு 1.50 லட்சம் பேர் வாகன விபத்தில் உயிரிழக்கின்றனர். இவர்களில் 45 சதவீதம் பேர் இளைஞர்கள், மாணவர்கள். மாணவப் பருவத் தில் இருப்பவர்கள் சட்டங்களை சரியாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பெட் கிராட் நிறுவனர் எம்.சுப்புராம், மருத்துவர் எஸ்.சீனி வாசன், பெட் கிராட் பொதுச் செய லர் எஸ்.அங்குசாமி உள்ளிட்ட பலர் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago