வயதானோருக்கு தடுப்பூசி செலுத்த குமாரபாளையத்தில் நடமாடும் வாகனம் :

By செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 100 சதவீத இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. முகாமிற்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளா முடியாத வயதானவர்களுக்காக நடமாடும் தடுப்பூசி வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டால், நடமாடும் தடுப்பூசி வாகனம் மூலம் அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கு 99944-421115, 73958 - 80658 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்களில் தொடர்பு கொண்டு உதவி கேட்டால் வயதானவர்களின் வீடுகளுக்கு நேரில் வந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்படும், என நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்