புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கரு.கீழத்தெரு ஊராட்சி குரும்பிவயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கவும், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ளவும் விவசாயிகள் முயற்சித்தனர். இதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அலுவலர்கள் கூறியதையடுத்து, 6 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், சட்ட விரோதமாக கூடியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்தது, தீ பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டது உட்பட 5 பிரிவுகளின் கீழ் முன்னாள் ஊராட்சித் தலைவர் எல்.ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் தனவேந்தன் உட்பட 40 பெண்கள் உட்பட 120 விவசாயிகள் மீது கறம்பக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago