டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை : கணக்கில் வராத ரூ.62,000 பறிமுதல்

By செய்திப்பிரிவு

கரூர் தொழிற்பேட்டையில் டாஸ்மாக் மாவட்டமேலாளர் அலுவலகம் மற்றும் கிடங்குஉள்ளது. இங்கு கரூர் ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். 2 மணிநேரத்துக்கு மேலாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.62,000 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன், கார் ஓட்டுநர்சபரி, வெள்ளியணை டாஸ்மாக் கடைமேற்பார்வையாளர் தர்மலிங்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்