தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை - அடவிநயினார் அணை நிரம்பியது :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 60 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 27 மி.மீ., தென்காசியில் 19.60 மி.மீ. மழை பதிவானது.

ஆய்க்குடியில் 15 மி.மீ., செங்கோட்டையில் 9, சிவகிரி, கருப்பாநதி அணை, கடனாநதி அணையில் தலா 7, ராமநதி அணையில் 6 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

இந்நிலையில், 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக வெளியேறியது. இந்த ஆண்டில் அடவிநயினார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது. கடனாநதி அணை நீர்மட்டம் ஒன்றேமுக்கால் அடி உயர்ந்து 64 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் இரண்டரை அடி உயர்ந்து 55 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.82 அடியாகவும் இருந்தது.

மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. கரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 5 மாதங்களுக்கு மேலாக தொடர்கிறது. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.

மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. கரோனா பரவல் காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 5 மாதங்களுக்கு மேலாக தொடர்கிறது. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்