வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர், ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி , நாங்குநேரி, களக்காடு, ராதாபுரம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்ட தேர்தலில் 70.36 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 69.34 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் 9 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப் பட்டிருந்தன. இம்மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஒன்றியம் வாரியாக அம்பாசமுத்திரம்- அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, இருதயகுளம், விக்கிரமசிங்கபும். சேரன்மகாதேவி- பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி. மானூர்- ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, காந்திநகர், பழைய பேட்டை. பாளையங்கோட்டை- ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்கந்தான்பாறை, முன்னீர்பள்ளம். பாப்பாக்குடி- இடைகால் மெரிட் தொழில்நுட்ப கல்லூரி. நாங்குநேரி- ரெக்ட் தொழில்நுட்ப கல்லூரி, தெற்கு விஜயநாரயணம், களக்காடு- திருக்குறுங்குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப்பள்ளி. ராதாபுரம்- தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. வள்ளியூர்- அடங்கார்குளம் அழகநேரி எஸ்.ஏ. ராஜா கலைக்கல்லூரி ஆகிய 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மானூர் ஊராட்சி ஒன்றியம் வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி பழைய பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தனும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வாக்கு எண்ணிக்கை மையமான ரோஸ்மேரி கலை கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவும் ஆய்வு செய்தனர். பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் வாக்கு எண்ணும் மையமான இடைகால் வாக்குச்சாவடி மையத்தில் எஸ்.பி., மணிவண்ணன் ஆய்வுசெய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்