மதுரை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி உட்பட ரூ. 379 கோடி இது வரை வசூல் ஆகாமல் உள்ளது.
யார், யார் வரி கட்டாமல் உள்ளனர் என்பதைக் கண்டறிய சிறப்பு ஆலோகர்கள் குழுவை அமைத்து நிலுவை வரியை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் இணைப்பு வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி, தொழில் வரி, கடை வாடகை மற்றும் குத்தகை வரி உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கிறது. அதிகபட்சமாக சொத்து வரி மட்டும் ரூ.97.03 கோடி கிடைக்கும்.
100 வார்டுகளில் உள்ள 3 லட்சத்து 26 ஆயிரத்து 460 வீடு கள் மற்றும் வணிக நிறுவனக் கட்டிடங்கள், 1,427 அரசு கட்டி டங்கள், 1617 வழக்குகள் உள்ள கட்டிடங்கள், 44,475 காலி வீட்டு மனைகளுக்கு மாநகராட்சி வரி நிர்ணயம் செய்துள்ளது.
வரி நிர்ணயம் செய்யாமல் இன்னும் ஏராளமான கட்டிடங்கள் மாநகராட்சியில் உள்ளன. அவற் றைக் கண்டறியவும், வரி விதிக் கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.379 கோடியே 73 லட்சத்து 41 ஆயிரம் வரி பாக்கி உள்ளது.
அதுமட்டுமில்லாது, இந்த நிதி யாண்டில் முதல் 6 மாதத்துக்கு ரூ.22.49 கோடி செலுத்தாமல் வரி பாக்கி நிலுவை வைத்துள்ளனர். அதனால், மாநகராட்சி மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியவில்லை.
நிதி நிலைமை சீராக இல் லாததால் மாநகராட்சி நிதியை பல்வேறு வகைகளில் பெருக்கவும், நிலுவைத் தொகையை வசூ லிக்கவும், வரி இனங்கள் தொ டர்பான குறைபாடுகளை சீர் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு ஆலோசகர்கள் குழுவை நியமித்துள்ளது.
இந்த சிறப்புக் குழுவில், மாநகராட்சி துணை ஆணையர் தலைவராகவும், மண்டல உதவி ஆணையர்கள் 4 பேர், மாநகராட்சி மைய கணிணி நிரல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆலோசனை கூற ஒய்வுபெற்ற மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் சிறப்பு கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.
இந்தக் குழுவினர் அனைத்து வரி இனங்களிலும் உள்ள நீண்ட கால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகாண நடவடிக்கை மேற் கொள்ளும்.
மேலும், நிலுவையில் உள்ள வரி இனங்களை முழுமையாக ஆராய்ந்து அவற்றில் குறை பாடுகளான குறைவு வரி, கூடுதல் வரி, வரி பிரிவினை போன்ற பிரச்சினைகளை ஆய்வு செய்து சீர் செய்து நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பில் கலெக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து வரி வசூல் செய்யும் பணியில் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகே யனிடம் கேட்டபோது, அவர் கூறி யதாவது:
இந்த நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் ரூ.22.49 கோடி வரி வசூலாக வேண்டி உள்ளது. இந்த வரியை ஏதோ ஒரு காரணத்தால் மக்கள் கட்டாமல் உள்ளனர். அவர் களிடம் வசூல் செய்து விடுவோம். ஆனால், நீண்டகால வரி பாக்கி மிகப்பெரிய அளவில் நிலுவை உள்ளது. நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி சிலர் வரி கட்டாமல் உள்ளனர். அதற்கான வழக்குகளை விரைவுபடுத்தி அவர்களிடம் வரி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், நீதிமன்ற வழக்குகள் இல்லாமலேயே மாநகராட்சியை ஏமாற்றி ஏராளமானோர் கோடிக்க ணக்கில் வரிபாக்கி வைத்துள்ளனர்.
வரி விதிப்பிலும் சில குறை பாடுகள், குளறுபடிகள் கடந்த காலத்தில் நடந்துள்ளன. அதை விசாரிக்கும் பணி முழுமையாக நடக்கிறது. இப்பணிகள் முடிந்ததும் வரி பாக்கி வைத்திருப்பவர்களிடம் வரி வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago