தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தைக் கைவிடக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப் பாட்டம் செய்தனர்.

இதற்கு மக்கள் மன்றங்களின் கூட் டமைப்பு தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் பி.செல்வக்குமார், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க தலைவர் எம்.சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.கொடியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாடுகளை அழைத்து வந்து விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக் குடிநீர்த் திட்டத்தால் தேனி மாவட்ட விவசாயம் பாதிக்கப்படும். எனவே, வைகை அணையை தூர் வாரி அங்கிருந்து ஆற்றின் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனிடையே மாடுகளுடன் போராட் டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து மாடுகளை அழைத்துக் கொண்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்