சிவகங்கை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆதிதிராவிடர் தொழிலாளர்க ளுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட் டனர்.
நூறு நாள் திட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆதிதிராவிடர், இதர பிரிவுத் தொழிலாளர்கள் எனத் தனித்தனியாக பிரித்து ஊதியம் வழங்கப்பட்டு வரு கிறது.
இந்நிலையில் ஒரு மாதமாக ஆதிதிராவிடர் தொழிலாளர்க ளுக்கு ஊதியம் வழங்கவில்லை.
இதைக் கண் டித்து இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு கொடுத் தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது:
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வாரந்தோறும் ஊதி யம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு மாதமாக ஒரு பிரிவினருக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
எங்களுக்கான ஊதியத்துக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என ஒன்றிய அதிகாரிகள் கூறு கின்றனர். விரைவில் ஊதியம் வழங்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச் சித்துறை அதிகாரி கூறுகையில், ‘இப்பிரச்சினை மாநிலம் முழு வதும் உள்ளது. ஓரிரு வாரங் களில் அனைவருக்கும் ஊதியம் கிடைக்கும்,’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago