திருமங்கலம் அருகே மறவன்குளம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம்வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளி முதல்வர் ஜெ.ஈஸ்டர்ஜோதி தலைமையில் நடைபெற்றது. திருமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சு.ரேவதி முன்னிலை வகித்தார்.
இதில், அறுவை சிகிச்சை நிபுணர் திவ்யா, மாணவர்களுக்கு தன் சுத்தம், ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் சந்திரன், 108 என்ற எண்ணின் மூலம் மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான நெறிமுறைகளை கூறினார். இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் வருங்கால சந்ததியினருக்கு ஊட்டச்சத்துவின் அவசியத்தையும் தவிர்க்க வேண்டிய 5 வெண்ணிறப் பொருட்களையும் எடுத்துக்கூறி நல்வழி காட்டினார். அக்.2-ல் காந்தி ஜெயந்தியன்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago