சிவகங்கையில் கல்வி அலுவலரை கண்டித்து - ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

By செய்திப்பிரிவு

விதிமீறிச் செயல்படும் கல்வித்துறை அதிகாரிகளைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகே முத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த கீதாஞ்சலி, பாசாங்கரை நடுநிலைப் பள்ளிக்கும், அங்கிருந்த தலைமை ஆசிரியர் சாந்தி முத்துப்பட்டிக்கும் சில கார ணங்களால் தற்காலிகமாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.

அவர்கள் 20 மாதங்களுக்கு மேலாக அங்கு இருப்பதால், நிதி சார்ந்த கோப்பு களைக் கையாள்வதில் சிரமம் உள்ளது. இருவரையும் அதே பள்ளிகளில் நிரந்தர மாறுதல் செய்ய வேண்டுமென ஆசிரியர் சங் கங்கள் வலியுறுத்தின. ஆனால், ஆளும் கட்சியினர் தலையீட்டால் சில நிர்வாக மாறுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் அமுதாவிடம் முறையிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாநிலத் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் முத்துப் பாண்டியன் தலைமையில் ஆசிரியர்கள் நேற்று வந்தனர். ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர் இல்லை. இதைக் கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அவர்களை சமாதானம் செய்தார். மாவட்டச் செயலாளர் முத்துப் பாண்டியன் கூறுகையில், அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி மாறுதல் உத்தரவு களை வழங்கி உள்ளனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்