60 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகள் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

By செய்திப்பிரிவு

மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 60 மாற்றுத் திறனாளிகளுக்கு தனது சொந்த செலவில் மூன்று சக்கர நாற்காலிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் 60 பேருக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது சொந்த நிதியில் மூன்று சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள தருமை ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் நேற்று

நடைபெற்றது. இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் மேலூர் பள்ளி மாணவிக்கு மொபைல் போன், அலங்காநல்லூர் பிளஸ் 2 மாணவிக்கு லேப்டாப் ஆகியவற்றை அவர் வழங்கிப் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்கும்போது இந்த 2 மாணவியரை சந்தித்தேன். அப்போது அளித்த உறுதியின்படி பள்ளி மாணவிகள் இருவருக்கும் லேப்டாப், மொபைல் போன் வழங்கியுள்ளேன். அதேபோல் தேர்தல் முடிந்தது முதல் திட்டம் தீட்டி எனது தொகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் 60 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்