ரூ.2.50 கோடியில் சீரமைக்கப்பட உள்ள தேவனந்தல் ஏரியை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் மூலம் கார்பரேட் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ.2.50 கோடியில் திருவண்ணாமலை அடுத்த தேவனந்தல் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 65 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியின் கரையை பலப்படுத்துதல், வனம் மேம்பாடு, ஏரியின் நடுவில் சிறிய தீவு அமைத்தல், பசுமை வளர்ச்சி, பறவைகள் குடில் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு கையெழுத்தானது.
இந்நிலையில் ஏரியை சீரமைக்கும் பணிகளை தொடங்குவதற்காக, தேவனந்தல் ஏரியை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், ஏரியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். அப்போது, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago