தி.மலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல்வெளியானது. இதையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் தி.மலை கிராமிய காவல் ஆய்வாளர் ஹேமமாலினி, உதவி ஆய்வாளர்கள் சிவசங்கரன், சத்யாநந்தன் (தனிப்படை) உள்ளிட்டோர், தி.மலை கிரிவலப்பாதையில் உள்ள பழனியாண்டவர் கோயில் அருகே நேற்று முன்தினம் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாதுக்கள் வேடத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுந்து, அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி மாவட்டம் சிவளார்பட்டி வட்டம் முத்துசாமிபுரம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் செல்வராஜ் மகன் சோலைமுத்துகுமார்(28) என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago