மதுரையில் 24 மையங்களில் நடந்த இந்திய ஆட்சிப் பணிக்கான யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
தமிழகம் முழுவதும் இந்திய ஆட்சிப் பணிக்கான யூபிஎஸ்சி முதல்நிலை எழுத்துத் தேர்வு நேற்று காலை, பிற்பகல் என இரண்டு கட்டமாக நடந்தது. மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரைக் கல்லூரி, யாதவா கல்லூரி, காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, லட்சுமிபுரம் டிவிஎஸ், மீனாட்சி சுந்தரேசுவரர் பள்ளிகள் என 24 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 10,093 பேரில் 4,137 பேர் காலையில் தேர்வெழுதினர். 5956 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. பிற்பகலில் நடந்த தேர்வில் 4,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக தேர்வர்களுக்கு கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. ஒரு அறைக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மீனாட்சி மகளிர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, நரிமேடு நாய்ஸ் பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago