திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் - தடுப்பூசி செலுத்தியோருக்கு சேமியா, வாளி பரிசு :

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1059 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தி யோருக்கு பிஸ்கட், சேமியா பாக்கெட்கள், துணிக்கடை தள்ளுபடி கூப்பன் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1059 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நகரில் 100 இடங்களில் நடந்த முகாம் களில் தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரபல துணிக் கடையின் ஐந்து சதவீத தள்ளுபடி கூப்பன், ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் சேமியா பாக்கெட் வழங் கப்பட்டன.

அதிகளவில் தடுப்பூசி செலுத்தப் படும் கிராம ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் வர்த்தக சபை சார்பில் குலுக்கல் முறையில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடந்த முதல் குலுக்களில் வட மதுரை ஊராட்சி ஒன்றியம் தேர்வானது. இதைத்தொடர்ந்து, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ச.தினேஷ்குமார், கிராம ஊராட் சியை குலுக்கல் முறையில் தேர்வு செய்தார். இதில் மோர்பட்டி கிராம ஊராட்சி தேர்வு செய்யப் பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 100 சதவீதத்தை எட்ட உள்ளாட்சி அமைப்புகள் பரிசுகளை அறிவித்துள்ளன. காளையார்கோவில் அருகே அதப்படக்கி ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு வாளியை பரிசாக வழங்கினார். அந்த ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 3,200 பேர் உள்ளனர். இதில் நேற்று வரை 3,150-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியதால் 99 சதவீதத்தை எட்டியுள்ளது.

தொடர் சிகிச்சையில் உள் ளோர், 80 வயதைக் கடந்தோர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. சிறப்பாகச் செயல்பட்ட அந்த ஊராட்சியை அதிகாரிகள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்