விழிப்புணர்வு பிரச்சாரத்தால் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் :

சேலம் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக நேற்று நடைபெற்ற 5-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 5-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில்,1 லட்சத்து 96 ஆயிரத்து 840 டோஸ் கோவிஷீல்டு, 27 ஆயிரத்து 10 டோஸ் கோவேக்சின் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 2 லட்சத்து 40 ஆயிரம் ஊசிக்குழல்கள் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில், 2.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

முகாம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆட்சியர் கார்மேகம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தினர். சேலம் மாநகரப் பகுதி மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மாவட்டத்தில் 1,235 வாக்குச்சாவடிகள், 107 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 1,392 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இப்பணியில் 1,392 செவிலியர்கள் மற்றும் கணினி உள்ளீட்டாளர்கள், ஆசிரியர்கள் , மருத்துவப் களப்பணியாளர்கள் உள்ளிட்ட 5,568 பேர் ஈடுபட்டனர். பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையால் முகாமில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நேற்று ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 111 பேர் தடுப்பூசி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்