அடவிநயினார் அணையில் 23 மி.மீ. மழை பதிவு :

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 23 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 6 மி.மீ., சிவகிரியில் 4 , தென்காசியில் 3.60, செங் கோட்டையில் 3, ஆய்க்குடியில் 2 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 62.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 53.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 129.75 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வலாறில் மட்டும் 3 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,481 கனஅடி நீர் வந்தது. 205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 92.90 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 106.86 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65.60 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.43 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 23.75 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்