தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராசு, மாவட்டச் செயலாளர் செய்யதுஇப்ராகிம்மூசா, மாவட்ட பொருளாளர் சேவியர் ஸ்டீபன் ஞானம், மாநில செயற்குழு உறுப்பினர் மருதுபாண்டியன் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 6 தேர்தல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். வாக்குச் சாவடி அலுவலர் 1, வாக்குச் சாவடி அலுவலர்1 ஏ என இரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
வாக்குச்சாவடி அலுவலக பிற பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில் 1, 1 ஏ பணியாளர்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. அதிலும் வாக்குச்சாவடிக்கு சென்ற ஐடென்டிபிகேசன் அலுவலர்களான வாக்குச் சாவடி அலுவலருக்கும் மதிப்பூதியம் வழங்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம்கட்ட தேர்தலில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், இரண்டாம்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் பலர் பணி இல்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்து ஆணையிட்டுள்ள மதிப்பூதிய தொகையை வழக்கம்போல் 1, 1 ஏ மற்றும் பிற அனைத்து வகை பணியாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்..
மதிப்பூதிய தொகையை வழக்கம்போல் 1, 1 ஏ மற்றும் பிற அனைத்து வகை பணியாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago