திருவண்ணாமலை மாவட்டத்தில் - வாக்குபெட்டிகள் உள்ள அறைக்கு காவல் துறையினர் பாதுகாப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக இருந்த 66 ஊரக உள்ளாட்சி பதவிகளில் 31 பதவிகளுக்கு போட்டியின்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவி, 26 வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 35 பதவிகளுக்கு நேற்று முன் தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்காக 77 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 31,553 வாக்காளர்களில் 24,693 பேர் வாக்களித்துள்ளனர். 78.26 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனர்.

பின்னர், 15 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகள் வைத்து அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன. வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு காவல்துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை (12-ம் தேதி) நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்