நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக அஞ்சல் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பெ.முருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மண்டல அஞ்சல் ஆய்வாளர் ரமேஷ் பங்கேற்று தபால் நிலையங்களின் செயல்பாடு, மாணவ, மாணவியர் சேமிக்கும் பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம், தபால் நிலையங்களில் செல்வ மகள் திட்டம் மற்றும் மாணவ மாணவியருக்கு எதிர்காலத்தில் அஞ்சல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
மேலும், நூலகங்களுக்கும், தபால் நிலையங்களுக்கும் இடையே உள்ள உறவுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக மாணவ, மாணவியருக்கு புதிய சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது.
சந்நியாசி கரடு துணை தபால் அலுவலர் தனலட்சுமி, கல்லூரி சுற்றுச்சூழல் மைய ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர பாண்டியன், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago