ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. 27 பதவிகள் காலியாக இருந்த நிலையில் 7 பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 20 பதவிகளுக்கு 65 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாப்பேட்டை, அந்தியூர், பவானி, நம்பியூர், டி .என். பாளையம், பவானிசாகர் ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
மொத்தம் 144 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் சென்றனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 28,156 , பெண் வாக்காளர்கள் 28,177, மற்றவர்கள் 2 என மொத்தம் 56,335 வாக்குகள் பதிவானது. மாவட்டத்தில் 70.22 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சிப் பதவிகளுக்கு 109 பேர் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இதில், 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 15 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 63 பேர் போட்டியிட்டனர்.மொத்தம் 141 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதால் அப்பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago