கடலூர் மாவட்ட இடைத்தேர்தலில் 76.43 % வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில்நேற்று நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் பண்ருட்டி ஒன்றியம் 2-வது வார்டு, குமராட்சி ஒன்றியம் 19- வது வார்டு, மேல்புவனகிரி ஒன்றியம் 11- வது வார்டு, விருத்தாசலம் ஒன்றியம் 7- வது வார்டு, முஷ்ணம் ஒன்றியம் 10- வது வார்டு, அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ரக்கோட்டை, கீழ்அருங்குணம் மற்றும் சன்னியாசிப்பேட்டை, பண்ருட்டி ஒன்றியம் மணம்தவிழ்ந்தபுத்தூர், காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் நத்தமலை ஊராட்சிகளிலும், மேல்புவனகிரி ஒன்றியம் தில்லைநாயகபுரம் ஊராட்சியிலும், நல்லூர் ஒன்றியம் சாத்தியம் ஊராட்சியிலும் மற்றும் முஷ்ணம் ஒன்றியம் கார்மாங்குடி ஊராட்சி மற்றும் பேரூர் ஊராட்சியிலும் ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான தேர்தலும், கடலூர் ஒன்றியம்

கீழகுமாரமங்கலம் ஊராட்சி 1- வது வார்டு மற்றும் விலங்கல்பட்டு 9- வது வார்டு, பண்ருட்டி ஒன்றியம் மேலிருப்பு ஊராட்சி 3-வது வார்டு, கீரப்பாளையம் ஒன்றியம் கீரப்பாளையம் ஊராட்சி 7- வதுவார்டு, பரங்கிப்பேட்டை ஒன்றியம் நக்கரவந்தன்குடி ஊராட்சி 5- வது வார்டு, மணிக்கொல்லை ஊராட்சி 5- வது வார்டு, நல்லூர் ஒன்றியம் வெண்கரும்பூர் ஊராட்சி 4-வது வார்டு, மங்களூர் ஒன்றியம் கொரக்கவாடி ஊராட்சி 4-வது வார்டு, நாவலூர் ஊராட்சி 5- வது

வார்டிலும், இராமநத்தம் ஊராட்சி 9 வது வார்டிலும், முஷ்ணம் ஒன்றியம்  ஆதிவராகநல்லூர் ஊராட்சி 2 வது வார்டிலும் பாளையங்கோட்டை மேல் ஊராட்சி 4 வது வார்டிலும் நேற்று இடைத் தேர்தல் நடந்தது.

மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஊராட்சி மன்றத்தலைவர்கள், 12 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதற்காக 102 வாக்குச்சாவடிகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்தம் 76.43 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்