மதுரையில் அமைதியாக நடந்த உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட ஊராட்சி வார்டில் 75 சதவீத வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது. மாவட்ட ஊராட்சி வார்டில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.

மதுரை மாவட்டத்தில் 6 பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு 16 மற்றும் குண்ணத்தூர், சென்னம்பட்டி உட்பட 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நேற்று தேர் தல் நடந்தது. 500 அரசு ஊழி யர்கள் வாக்குப்பதிவு மற்றும் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில் 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் செக்காணூரணி உட்பட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் பரபரப்பு இன்றி நடந்தது.

டி.குண்ணத்தூர் கிராம வார்டு உறுப்பினர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்துடன் வாக்களித்தார்.

மாவட்ட ஊராட்சி வார்டில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த முறை இந்த வார்டில் அதிமுக 8,500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. தற்போது ஆளும் கட்சியான திமுக எப்படியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கடுமையாக தேர்தல் பணியாற்றியது.

வாக்காளர்களை அழைத்து வருவது உள்ளிட்ட நேற்றைய தேர்தல் பணியிலும் இரு கட்சிகளும் விறுவிறுப்பை காட்டின. திமுகவினரின் எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிமுகவினர் தங்கள் கட்சி விசுவாசத்தை காட்டியதால் பரபரப்பு அதிகரித்தது.

இந்த வார்டில் 56,100 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் திருமங்கலம் பிகேஎன் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. அக்.12-ம் தேதி வாக்கு எண் ணிக்கை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்