சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே மேலாயன்பட்டியில் பொது பயன்பாட்டு நிலங்கள், மயான பகுதி, 2 ஊருணிக்குரிய நிலங்கள், கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றை தனியார் சிலருக்கு பட்டா கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து மேலாயன்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டம் தலைவர் மதுரை வீரன் தலைமையில் நடந்தது. இதில் தனியாருக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்யக்கோரி நவ.10-ல் திருப்பத்தூரில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago