நாமக்கல் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் சாதிச்சான்று உண்மைத்தன்மை ஆய்வு முகாம் நேற்று நடைபெற்றது. ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் மரகதவள்ளி தலைமை வகித்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற்ற 62 நபர்கள் பங்கேற்றனர். மாநில, மாவட்ட சாதிச்சான்று சரிபார்க்கும் குழு உறுப்பினரும், மானுடவியல் வல்லுனருமான பாண்டியராஜ் பங்கேற்று அனைவரது சான்றிதழ்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், பட்டியலின சாதிச்சான்று மூலம் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறுபவர்கள் முறையாக சாதிச்சான்று பெற்றவர்தானா? இவருக்கு வழங்கப்பட்ட சலுகை சரியானதுதானா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இது போன்ற விசாரணை வழக்கத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சாதிச்சான்று சரிபார்க்கும் முகாமில் பல பகுதியில் இருந்தும் வந்துள்ளனர். இவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago