ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருவறையை அடுத்துள்ள 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து, மூலவர் ரங்கநாதரை வழிபடுவர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றபோது, 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வருவதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்தது. அதன்பின் இதுவரை மீண்டும் அவ்வழியாக பக்தர்களை அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் நேற்று ரங்கம் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது கோயில் 2-ம் பிரகாரத்தில் பக்தர்களை அனுமதிக்கும் விதம் குறித்தும் கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வின்போது கோயில் இணை ஆணையர் (பொ) கல்யாணி உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago