மணப்பாறை அருகே - தாயின் உடலை வைத்து 3 நாட்களாக பிரார்த்தனை செய்த மகள்கள் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி மேரி(72). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவரை, இவரது மகள்களான ஜெசிந்தா (42), ஜெயந்தி (40) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துவிட்டு, அதன்பின் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு மேரியின் உடல் மீது பைபிள் வைத்து பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இறந்த 3 நாட்களுக்கும் மேலான ஒரு மூதாட்டியின் உடலை வைத்து அவரது மகள்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதாக மணப்பாறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. வட்டாட்சியர் சேக்கிழார் உள்ளிட்டோருடன் போலீஸார் அங்குசென்று பார்த்தபோது அப்பெண் இறந்துவிட்டது தெரியவந்தது. ஆனால் அதை நம்ப மறுத்த அவரது மகள்கள், தங்களது தாய் கோமா நிலையில் இருப்பதாகவும், கடவுள் காப்பாற்றுவார் எனவும் கூறி தொடர்ந்து பிரார்த்தனை செய்ய முயற்சித்ததுடன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஒருவழியாக மேரியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேரியின் உடல் அவரது ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு வீட்டருகே புதைக்கப்பட்டது. இறந்தவரை உயிருடன் இருப்பதாக கருதி பிரார்த்தனை செய்த அவரது மகள்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்