மேல் முறையீடு செய்ய விரும்பும் கைதிகள் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு :

By செய்திப்பிரிவு

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பதிபூரணம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து 1994-ல் செங்கோட்டை போலீஸார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் நெல்லை மாவட்ட நீதிமன்றம் எனக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சாட்சிகளை முறையாக விசாரிக்காமல் எனக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறேன். ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும், அப்பீல் மனு நிலுவையில் இருக்கும்வரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம் மனுதாரரைப் போல, மேல்முறையீடு செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்து வருவோர் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய சட்டப் பணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர் விசாரித் தனர்.

அப்போது சட்டப்பணிகள் ஆணையம் சார்பில், தாக்க லான அறிக்கையில், தமிழக சிறைகளில் 3,500-க்கும் மேற்பட்டோர் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இதில் 552 பேர் இதுவரை தங்களுக்கு விதித்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அவர்களில் எத்தனை பேர் மேல்முறையீடு செய்ய விரும்புகிறார்கள் என அறிந்து, அது பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டு, விசாரணையை அக். 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்