முகவரை மாற்றக்கோரி திடீர் போராட்டம் - திசையன்விளையில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு : வள்ளியூர் அருகே தேர்தலை கிராம மக்கள் புறக்கணிப்பு

திசையன்விளையில் வாக்குச் சாவடி முகவரை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வள்ளியூர் அருகே வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை மக்கள் புறக்கணித்தனர்.

திசையன்விளை அருகே கஸ்தூரிரெங்கபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. கஸ்தூரி ரெங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முடவன்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சுயேச்சை வேட்பாளருக்கு வெளியூரை சேர்ந்த ஒருவர் முகவராக பணி அமர்த்தப்பட்டிருந்தார்.

இதற்கு அந்த கிராம மக்களும், மற்ற வேட்பாளர்களின் முகவர் களும் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளூரை சேர்ந்தவரை முகவராக நியமித்தால் மட்டுமே வாக்களிப்போம் என்று கிராம மக்கள் கூறியதால் வாக்குப்பதிவு திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு தொடங்கவில்லை. வாக்குச் சாவடிக்குள் முகவர்களும் செல்ல வில்லை. வாக்காளர்களும் வாக்களிக்க வரவில்லை.

இது குறித்து தெரியவந்ததும் தேர்தல் அதிகாரிகளும், இன்ஸ் பெக்டர் ஜமால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் அங்குவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட சுயேச்சை வேட்பாளரை அழைத்து வேறு முகவரை நியமிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி உள்ளூரை சேர்ந்தவரை முகவராக நியமித்ததை அடுத்து 1 மணிநேரத்துக்குப்பின் வாக்குப் பதிவு தொடங்கியது.

தேர்தல் புறக்கணிப்பு

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் சிதம்பராபுரம் யாக்கோபுரம் ஊராட்சியில் 9 வார்டுகளில் 3,400 வாக்காளர்கள் உள்ளனர். வார்டு மறுவரையறையின்போது இங்குள்ள சுப்பையா பாண்டியன் தெரு, ஆற்றங்கால் தெரு, காட்டன்மில் தெரு பகுதிகளில் உள்ள வாக்காளர்களை வேறு ஊராட்சிகளில் இணைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதில் 150 வாக்காளர்களை 4 கி.மீ. தொலைவில் உள்ள பழவூர் ஊராட்சியிலும், 50 வாக்காளர் களை 8 கி.மீ. தொலைவிலுள்ள ஆவரைகுளம் ஊராட்சியிலும் இணைத்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சிதம்பராபுரம் யாக்கோ புரம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என்று இங்குள்ளவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

மேலும், தேர்தலில் வாக் களிக்க வாக்குச் சாவடி சீட்டு வழங்கப்படவில்லை என்றும் வேட்பாளர்கள் யாரும் அப்பகுதி களில் வாக்கு சேகரிக்கவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தேர்தலையும் புறக்கணித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்