திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது:
தடுப்பூசி போட்டுக் கொள்வதன்மூலம் கரோனா 3-ம் அலையை எதிர் கொள்ள முடியும். எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 5-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் ஏற்கெனவே செப்டம்பர் 12-ம் தேதி 951 சிறப்பு முகாம்களும் 19-ம் தேதி 449 சிறப்பு முகாம்களும், 26-ம் தேதி 435 சிறப்பு முகாம்களும், அக்டோபர் 3-ம் தேதி 407 சிறப்பு முகாம் களும் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 9,14,909 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இது 69.19சதவீதம் ஆகும். இதுவரை காணி பழங்குடியின மக்கள் 95 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று 272 நடமாடும் சிறப்பு முகாம்கள், 463 நிலையான சிறப்பு முகாம்கள் என மொத்தம் 735 சிறப்பு முகாம்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெரு மாள், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.கணேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago