தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் வெற்றி :

கரூரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.

கரூரில் இன்டர்நேஷனல் கியோ குஷன் கராத்தே அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், குமாரபாளையம் சுந்தரம் காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கராத்தே மாணவ, மாணவியர் 40 பேர் பங்கேற்றனர்.

இன்டர் நேஷனல் கியோ குஷன் கராத்தே அமைப்பின் தமிழக தலைமை பயிற்சியாளர் அர்ஜுன் தலைமையில் 7,10,13, 15, 20, 22, 25,30 உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவின் கீழ் பங்கேற்ற மாணவ, மாணவியரில் 26 பேர் வெற்றி பெற்றனர்.

குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்த வர்ஷினி, 16 சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார். வெற்றி பெற்றவர்களை டி.எஸ்.பி.சண்முகம், எஸ்.எஸ்.எம். பொறியியல், கலை கல்லூரி தாளாளர் மதிவாணன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE