வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - சேலம் மாநகராட்சி பொறியாளரின் வங்கி லாக்கரை திறந்து விசாரணை :

By செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி பொறியாளர் வங்கி லாக்கரில் இருந்த ரூ.13.99 லட்சம் பணம் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி பொறியாளராக இருந்து வருபவர் முனைவர் அசோகன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அசோகன், அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அவரது வீட்டில் நடத்திய சோதனையின்போது, சேலம் நகர கூட்டுறவு வங்கியில் அசோகன் பெயரில் உள்ள லாக்கர் சாவியை கைப்பற்றினர்.

லாக்கரை திறந்து சோதனை நடத்த நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி பெற்றனர். இதையடுத்து, கடந்த 6-ம் தேதி சேலம் நகர கூட்டுறவு வங்கியில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிகாரிகள் முன்னிலையில் வங்கி லாக்கரை திறந்து பார்த்தனர். அதில் ரூ.13.99 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த பணம் எவ்வாறு அசோகன், அவரது மனைவிக்கு வந்தது, அதற்கான கணக்கு, ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்