மதுரை மாவட்ட ஊராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் தேர் தலை முறைகேடு இன்றி நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆட்சியர் அனீஷ் சேகர், எஸ்பி பாஸ்கரனிடம் நேற்று மனு அளித் தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்டம் 16-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் (திரு மங்கலம்) தேர்தலில் ஆளுங் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிக ளின்படி ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: தேர்தலை நியா யமாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம், டிஜிபி, தென் மண்டல ஐஜி, ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித் துள்ளோம் என்றார். எம்எல்ஏக்கள் விவி.ராஜன் செல்லப்பா, ஐயப் பன், பெரியபுள்ளான் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago