மதுரையில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் : வாக்குப் பதிவை அமைதியாக நடத்த ஏற்பாடு

By செய்திப்பிரிவு

மதுரையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 6 பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தல் ஏற்பாடு, பாதுகாப்பில் 500 அலுவலர்கள், 800 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 23 பதவிகள் காலியாக இருந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் 23 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட ஊராட்சி 16-வது வார்டு உறுப்பினர் மற்றும் 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. 500 அலு வலர்கள் தேர்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் குகிறது.

கட்சி அடிப்படையில் நடக்கும் மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இத னால் இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. தேர்தல் முடிந் ததும் வாக்கு எண்ணிக்கை மையமான திருமங்கலம் பிகேஎன் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடக்கும் 104 வாக்குச் சாவடிகளில் பதற்றமான 11-ல் வீடியோ கேமரா, நுண் பார்வை யாளர் வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பதற்றமான வாக்குச் சாவடி களை எஸ்.பி பாஸ்கரன் ஆய்வு செய்த பின் கூறியதாவது:

3 கூடுதல் எஸ்பி கள், 11 டிஎஸ்பிகள், 30 காவல் ஆய் வாளர்கள், 92 எஸ்ஐகள், 650 காவலர்கள், பட்டாலியன், ஊர்க்காவல் படையினர் என 800-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

வாக்கு எண்ணிக்கை அக்.12-ம் தேதி நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்