கேரளாவில் இருந்து ஈரோட்டுக்கு 1324 மெ.டன் உரம் வருகை :

By செய்திப்பிரிவு

ஈரோடு வேளாண்மைப் பணிகளுக்காக, கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ரயில் மூலம் அம்மோனியம் சல்பேட் 824 மெட்ரிக் டன் மற்றும் 500 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஈரோடு வந்தன.

ஈரோடு ரயில் நிலையத்தில் இதனைப் பார்வையிட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நடப்புப்பருவத்துக்கு உரத்தின் தேவை மிகவும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உரத்தினைப் பெற்று விநியோகித்து வருகிறோம். இதன்படி, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 824 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட் மற்றும் 500 மெ.டன் 20: 20: 0:13 காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் மூலம் வரவழைக்கப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா 1950 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1497 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1517 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 6734 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரங்களை உரிய ரசீது பெற்று வாங்க வேண்டும். மேலும், மண் வள அட்டையின் அடிப்படையில் அல்லது வேளாண்மை துறை பரிந்துரையின்படி உரம் இட வேண்டும். தேவைக்கு அதிகமாக யூரியா உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்