ஜிஎஸ்டியில் காகிதப்பை உற்பத்திக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : மத்திய நிதி அமைச்சருக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

காகிதப்பை தொழிலுக்கு, ஜி.எஸ்.டி.யில் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும், என தமிழ்நாடு காகிதப்பை உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பேப்பர் பை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜி.தியாகராஜன், செயலாளர் சென்னிமலை எஸ்.கே.ராமசாமி ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

காகிதப்பை தொழிலுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் 12 சதவீத ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக கடந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. காகிதப்பை தொழில் மிகவும் குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் காகிதப்பை தொழிலின் நிலை அறிந்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2007-ம் ஆண்டு வரை முழு வரி விலக்கு நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் மீண்டும் 2007-ம் ஆண்டு முதல் வாட் அறிமுகப்படுத்தி, காகிதப்பைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.பின்னர் மீண்டும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி 12 சதவீதம் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்த வரி விதிப்பு எங்களுக்கு ஏற்கெனவே கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காகிதப் பைகள் மருந்து கடை, மளிகை, உணவகங்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். காகிதப்பை உபயோகத்தை அதிகரிக்க ஊக்கப்படுத்தினால், சுற்றுப்புற சூழலை பாதுகாக்க முடியும். எனவே, காகிதப்பை உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்