கரோனா விதிகள் அமலில் இருப்பதால் 4-ம் சனிக்கிழமை அன்று கோயில்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது என திருப்பத்தூர் மாவாட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள மத வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புரட்டாசி 4-ம் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கோயில்களுக்கு சென்றால் அதன் மூலம் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 4-ம் சனிக்கிழமையன்று கோயில்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago