வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1,630 மையங்களில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 9.20 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் முதல் டோஸ் தடுப்பூசியை 6.80 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 2.40 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.
இதற்காக வேலூர் மாவட் டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற் பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி (நாளை) 5-ம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1,000 மையங்களில் நடைபெற உள்து. இதில், 60 முதல் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி உள்ளது.
மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் சற்று குறைவாக இருக்கிறது. இதற்காக, ஆட்டோவில் ஒலிப் பெருக்கி மூலம், உள்ளூர் கேபிள் டி.விக்கள், எப்.எம் ரேடியோக்கள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும். தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அதிகம் பங்கேற்க அங்கன்வாடி பணி யாளர்கள், மகளிர் குழுவினர், ஆசிரியர்கள் மூலம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுகுறித்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை இதுவரை 5.18 லட்சம் பேரும் , இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 1.3 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 73 ஆயிரத்து 193 பேர் இதுவரை இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இதுவரை போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இவர்கள் வரும் 10-ம் தேதி (நாளை) நடைபெற உள்ள முகாம்களில் தடுப்பூசியை அருகில் உள்ள முகாம்களில் செலுத்திக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி காலம் கடத்தக்கூடாது. கடந்த 2 மாதங் களில் கரோனா தொற்றால் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த 15 பேரில் 13 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வர்கள். 2 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். அவர்களுக்கு இணை நோய்கள் இருந்ததால் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 523 பேரில் 128 பேர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள்.
எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். கரோனா பெரியளவில் பரவாமல் இருப்பதற்கு தடுப்பூசிதான் காரணம். குறிப்பாக சர்க்கரை, இதயநோய் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக கரோனா தடுப் பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி 630 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago