குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர்.
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.காவல் ஆய்வாளர் செல்வம் தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று காவல் நிலைய வளாகத்தில் 200 மரக்கன்றுகளை நட்டனர். சமூக குழுமத்தின் தலைவர் அன்பு மற்றும் நிர்வாகிகள் மரக்கன்றுகளை வழங்கினர்.குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் பூவராகவன், பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன், புருஷோத்தமன் மற்றும் பலர்கலந்து கொண்டனர். இந்த காவல்நிலையம் அருகே காவல்நிலையத்துக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர்இடத்தில் முட்புதர்கள் வளர்ந்து காடு போல இருந்தது. இன்ஸ்பெக்டர் , சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸாரின் முயற்சியில் அந்த இடத்தில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன. அந்த இடத்தில் தான் தற்போது மரக்கன்றுகள் நடப்பட்டன. போலீஸாரின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago