விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங் களில் 11 ஒன்றியங்களில் நாளை உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 3,14,449 ஆண் வாக்காளர்களும், 3,17,330 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம்பாலினத்தவர் உட்பட 6,31,785 பேர் வாக்களித்தனர். இதில் 83.65 சதவீத வாக்குகள் பதிவானது. இதே போல் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 1,95,322 ஆண்வாக்காளர்கள், 1,94,274 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 மூன்றாம்பாலினத்தவர் உட்பட 3,89,598பேர் வாக்களித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.25 சதவீத வாக்குகள் பதிவானது. விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூர், மயிலம், மரக் காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 1,379 வாக்குப்பதிவு மையங்களில் நாளை உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 82 பேரும், 135 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 625 பேரும், 316 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 1239 பேரும், 2337 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 7,009 பேரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணியில் 11,411 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களில் 950 வாக்குப்பதிவு மையங்களில் நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்த லில் 8 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு 49 பேரும், 88 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 337 பேரும், 180 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கு 605 பேரும், 1,308 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 4,019 பேரும் போட்டியிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago