மதுரையில் மலர்ச்சந்தை மாட்டுத்தாவணி வேளாண் விளைபொருள் வணிக வளாகத்தில் நாளை முதல் மீண்டும் செயல்படும் என விற்பனைக் குழுச் செயலாளர் வி.மெர்சி ஜெயராணி தெரி வித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆக.2 முதல் மலர்ச் சந்தை (பூ மார்க்கெட்) மூடப்பட்டு மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வந்தது.
விவசாயிகள், வணிகர்கள் நலன் கருதி மலர்ச்சந்தையை மீண்டும் அதே இடத்தில் தொடங்க மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நாளை முதல் மலர்ச்சந்தை மாட்டுத்தாவணி வேளாண் விற்பனைக்குழு வணிக வளாகத்தில் செயல்படும்என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago