கோயில்களை திறக்கக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் - தமிழகத்தை மீட்கும் பொறுப்பு பாஜகவுக்கு உள்ளது : துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கருத்து

By செய்திப்பிரிவு

கோயில்களை திறக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் என்.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியதாவது:

தமிழகத்தை மீட்கும் பொறுப்பு பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் 6 மாதத்திற்குள் காலி செய்துவிட்டு மொட்டை போடுபவர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு எந்த அடிப்படையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்குவதாக தெரிவித்தார்.

அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அனைத்து கட்டுப்பாடுகளுடன் இந்து கோயில்களை திறக்க வேண்டும். கலாச்சாரத்திற்கு, மதத்திற்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது, என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்கள் அனைத்தையும் திறக்கக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம் உட்பட சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஜி.ஏ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.பச்சியண்ணன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

‘கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிற துறைகளில் கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத்தலங் களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

இதனால், மலர், எலுமிச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விற்பனையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்